Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th September 2025

Daily Current Affairs 

Here we have updated 24th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வருவாய் பற்றாக்குறை

Vetri Study Center Current Affairs - Revenue deficit

  • 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை 36,215 கோடியாக உள்ளது.
  • வருவாய் பற்றாக்குறையில் தமிழ்நாடு இரண்டாமிடம் பிடித்துள்ளது.
  • இத்தகவலை CAG அறிக்கை தெரிவித்துள்ளது.
  • CAG (Comptroller and Auditor General of India) – இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்.
  • ரூ.43,488 கோடி வருவாய் பற்றாக்குறையுடன் ஆந்திரப்பிரதேசம் வருவாய் பற்றாக்குறை மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்தியாவில் 12 மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறையுடன் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்

  • நியமன விதி – 148
  • கடமைகள் மற்றும் அதிகாரங்கள் விதி – 149
  • இவர் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படுகிறார்.
  • தற்போதைய தலைமை கணக்கு தணிக்கையாளர் – கிரிஷ் சந்திர மூர்த்தி
  • பதவிக்காலம் – 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

வருவாய் உபரி

  • 2022-23 CAG அறிக்கையின்படி வருவாய் உபரி அதிகமுள்ள மாநிலங்களில் உத்திரப்பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது.
  • உத்திரப்பிரதேசத்தின் வருவாய் உபரி – 37,263 கோடி
  • இந்தியாவில் 16 மாநிலங்களில் வருவாய் உபரியுடன் உள்ளது.

BBNJ ஓப்பந்தம்

  • வருகின்ற 17 ஜனவரி 2026 முதல், BBNJ ஓப்பந்தம் நடைமுறைக்கு வர உள்ளது.
  • BBNJ – (Biodiversity Beyond National Jurisdiction) – தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர் பெருக்கம்

பட்டு வளர்ச்சி

  • பட்டு வளர்ச்சியில் சிறந்த மாநில விருதினை ஆந்திரப்பிரதேசம் பெற்றுள்ளது.
  • ட்டு உற்பத்தியில் கர்நாடகம் முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • மத்திய பட்டு வாரியம், பெங்களூரு – 1948

பட்டு உற்பத்தி

  • சீனா – முதலிடம்
  • இந்தியா – இராண்டமிடம்

தேசிய மின்-ஆளுகை மாநாடு

  • தேசிய மின்-ஆளுகை மாநாடானது ஆந்திரபிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

தேசிய திரைப்பட விருது

  • சிறந்த நடிகருக்கான தேசிய விருது – ஷாருக்கான் (ஜவான்)
  • சிறந்த நடிகர் – விக்ராந்த் மாசி (12th Fail)
  • சிறந்த நடிகை – ராணி முகர்ஜி (Mrs.Chattaerjee vs Norway)
  • துணை நடிகர் – எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)
  • துணை நடிகை – ஊர்வசி (உள்ளொழுக்கு)
  • சிறந்த இசையமைப்பாளர் – ஜி.வி.பிரகாஷ்
  • சிறந்த திரைக்கதை ஆசிரியர் – ராம்குமார் (பார்க்கிங்)

பாலன் டி ஓர் விருது 2025 (Ballon d’Or)

Vetri Study Center Current Affairs - Ousmane Dembele

கால்பந்து வீரர்களுக்கு தங்கப்பந்து விருதாக வழங்கப்படுகிறது.

  • ஆண்கள் பிரிவு – உஸ்மான் டெம்பே (பிரான்ஸ்)
  • பெண்கள் பிரிவு – அயிட்டான போன்மதி (ஸ்பெயின்)

S-400

  • ரஷ்யாவிடமிருந்து இந்தியா நான்கு S-400 வான் பாதுகாப்பு சாதனத்தை 2026 இறுதிக்குள் பெற உள்ளது.
  • இது எதிரி ஏவுகணைகளை வானில் தாக்கி அழிக்கும் சக்தி படைத்தது.
  • இதனை இந்தியாவில் சுதர்சன சக்ரா என்று அழைக்கின்றனர்.

முக்கிய தினம்

உலக கொரில்லா தினம் (World Gorilla Day) – செப்டம்பர் 24

சொற்கதிர்

  • Track – பந்தயத்தடம்
  • Escalator – இயங்குபடி (நகரும் மின்படி, மின்படிக்கட்டு)

கூடுதல் செய்திகள்

  • தமிழ்நாடு மின்-ஆளுகை நிறுவனம் (TNeGA) – 2007

தமிழ்நாட்டில் உள்ள உயிர்கோளக் காப்பகங்கள்

  1. நீலகிரி உயிர்க்கோள காப்பகம்
  2. மன்னார் வளைகுடா உயர்க்கோள காப்பகம்
  3. அகத்திய மலை உயர்க்கோள காப்பகம்

BOD – Biological Oxygen Demand

  • BOD என்பது உயிரியல் ஆக்ஸிஜன் தேவையை குறிக்கிறது.
  • நீர் மாதிரியில் உள்ள கரிமப் பொருட்களை சிதைக்க ஏரோபிக் பாக்டீரியாக்களுக்குத் தேவைப்படும் கரைந்த ஆக்ஸிஜனின் அளவைக் குறிக்கிறது.
  • ஒரு லிட்டர் நீரில் 3 மி.கிராமிற்கு அதிகமாக BOD இருந்தால் அந்நீர் மாசுபாடு நிறைந்து குளிப்பதற்கு தகுதியற்றதாகவும் உள்ளது.

Related Links

Leave a Comment