Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 27th and 28th November

Daily Current Affairs 

Here we have updated 27th and 28th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நாணயம் கண்டுபிடிப்பு

Vetri Study Center Current Affairs - Silver Coin

  • பண்ருட்டி தென்பெண்ணை ஆற்றங்கரையில் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தை சேர்ந்த வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது.

டி.என் ரைஸிங் மாநாடு

  • டி.என் ரைஸிங் மாநாடானது (TN Rising) கோயம்புத்தூரில் நடைபெற்றுள்ளது.

வெள்ளி யானை விருது

  • பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருதானது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு

  • ஈரோடு மாவட்டம் முடக்குறிச்சியில் மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறக்கப்பட்டுள்ளது.
  • பவானிப்போர் (1801), ஓடாநிலைப் போர் (1802), அரச்சலூர் போர் (1803) ஆகியவற்றில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய தளபதி மாவீரன் பொல்லான் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

  • சிவகங்கையில் வெண்ணி காலடி (புலித்தேவர் போர்படை தளபதி) மற்றும் குயிலி (வேலுநாச்சியார் தோழி) இருவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

எம்.எஸ்.கிருஷ்ணன்

  • செவ்வாய் கிரகத்தில் 300 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பள்ளத்திற்கு இந்திய புவியியல் சங்க இயக்குநரான எம்.எஸ்.கிருஷ்ணன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • இவர் இந்திய புவியியல் சங்க இயக்குநராக பணியாற்றிய முதல் இந்தியர் ஆவார்.

காமன்வெல்த் விளையாட்டு 2030

  • 2030ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டு போட்டியானது குஜராத் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது.
  • காமன்வெல்த் விளையாட்டு 2026 – கிளாஸ்கோ (ஐக்கிய இராச்சியம்)

தொடர்புடைய செய்திகள்

  • முதல் காமன்வெல்த் விளையாட்டு – 1930 (ஹாமில்டன், கனடா)

நினைவுச் சின்னம் திறப்பு

Vetri Study Center Current Affairs - Panchajanyam

  • ஹரியானாவின் குருக்ஷேத்திராவில் மகாபாரத அனுபவ கேந்திரா வளாகத்தில் பாஞ்சஜன்யம் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டுள்ளது.
  • பாஞ்சஜன்யம் – விஷ்ணுவின் கையில் உள்ள சங்கு

நினைவு தினம்

  • நவம்பர் 25ல் சீக்கிய குருவான தேஜ் பகதூரின் 350வது நினைவு நாளில் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டுள்ளது.
  • 1675-ல் தேஜ்பகதூர் ஒளரங்கசீப்பால் தூக்கிலப்பட்டார்.
  • சீக்கியரின் 9வது குரு ஆவார்.

வி.பி.சிங் நினைவு தினம்

  • சமூக நீதி காவலராக கருதப்படும் வி.பி.சிங் நினைவு தினம் நவம்பர் 27-ல் அனுசரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • வி.பி.சிங் சிலையானது சென்னை மாநில கல்லூரியில் நிறுவப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் 7வது பிரதமராக (2.12.1989 – 10.10.1990) பதவி வகித்தவர்.
  • காவிரி நதிநீர் தீர்பாயம் உருவாக காரணமானவர்.
  • பி.பி.மண்டல் கமிஷனின் பரிந்துரையான பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை அறிவித்தவர்.
  • ஆங்கிலோ இந்தியன், எஸ்.சி., எஸ்.டி. நாடாளுமன்றம், சட்டமன்ற இடஒதுக்கீட்டினை 62வது சட்டதிருத்தம் மூலம் 10 ஆண்டுகள் மேலும் நீடித்தவர்

இந்திரஜால்

  • இந்தியாவின் முதல் உள்ளாட்டு தானியங்கி ட்ரோன் பாதுகாப்பு அமைப்பிற்கு இந்திரஜால் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
  • வான்வழி ஆபத்துகளை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதனை ஹைதரபாத்தின் க்ரீன் ரோபோட்டிக்ஸ் தயாரித்துள்ளது.

புதிய புயல்

  • தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டுள்ளது.
  • இப்பெயரினை ஏமன் நாடு பரிந்துரைத்துள்ளது.

ஜகார்த்தா

  • அதிக மக்கள் தொகை கொண்ட நகர பட்டியலில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தா முதலிடம் பிடித்துள்ளது.
  • இரண்டாவது இடம் – டாக்கா (வங்கதேசம்)
  • மூன்றாவது இடம் – டாேக்கியாே (ஜப்பான்)

உலககோப்பை ஸ்குவாஷ் போட்டி

  • உலககோப்பை ஸ்குவாஷ் போட்டியானது சென்னையில் நடைபெற உள்ளது.
  • தமிழகத்தின் சார்பில் ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில்குமார் பங்கேற்க உள்ளன.

பிடே உலகக்கோப்பை செஸ்

  • கோவாவில் நடைபெற்ற பிடே உலகக்கோப்பை செஸ் போட்டியில் உஸ்பெகிஸ்தான் ஜாவோகிர் சிண்டாரோஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இளம்வீரர் (19 வயது)

தொடர்புடைய செய்திகள்

  • பிடே உலகக் கோப்பை செஸ் போட்டிக்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயரிடப்பட்டுள்ளது.

விளம்பரதூதர்

Vetri Study Center Current Affairs - Rohit Sharma

  • 2026-ல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியின் விளம்பர தூதுராக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

சிவப்பு கிரக தினம் (Red Planet Day) – நவம்பர் 28

  • 1964-ல் முதன் முறையாக செவ்வாய் கிரகத்திற்குச் செலுத்தப்பட்ட மரைனர் 4 விண்கலம் நினைவுகூரும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கூடுதல் தகவல்கள்

  • ஆளுமை உரிமைகள் – பிரிவு 21
  • மக்கள் நம்பிக்கை சட்டம் (Jan Vishwa) – 2023

Related Links

Leave a Comment