Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 29th November 2025

Daily Current Affairs 

Here we have updated 29th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அம்பேத்கர் சிலை

Vetri Study Center Current Affairs - Ambedkar statue

  • 26 நவம்பர் 2025-ல் அம்பேத்கரின் மார்பளவு சிலையானது யுனஸ்கோவின் தலைமையகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

மாணவர் தூதுவர் திட்டம்

  • உறுப்புதானம் குறித்து புரிதலையும் அவசியத்தையும் உணர்த்தும் மாணவர் தூதுவர் திட்டம் 10 மருத்துவ கல்லூரிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
  • பிப்ரவரி 2025ல் முதன்முதலாக சென்னை மருத்துவக்கல்லூரியில் தொடங்கப்பட்டது.

நதிநீர் இணைப்பு திட்டம்

  • தமிழ்நாட்டின் முதல் நதிகள் இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு பாேன்ற இணைக்கப்பட்டுள்ளன.
  • திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் பயனடைய உள்ளன.
  • கடந்த 2008-ல் ஒப்புதல் வழங்கப்பட்டு 2009-ல் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் பூங்கா

  • குறைகடத்தி கொள்ளை 2024ன் மிஷன் 2030-ன் கீழ் கோயம்புத்தூர் (சூலூர்), திருப்பூரில் (பல்லடம்) செமிகண்டக்டர் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

வாழ்நாள் சாதனையாளர் விருது

  • கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அசாம்

  • பலதார திருமண தடை சட்டமசோதா அசாமில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சாகர் பந்து

  • டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ ஆபரேஷன் சாகர் பந்து தொடங்கப்பட்டுள்ளது.

சூர்ய கிரண் பயிற்சி

Vetri Study Center Current Affairs - Surya Kiran

  • இந்தியா மற்றும் நோபளம் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியானது உத்திரகாண்டில் நடைபெற்றுள்ளது.

முத்ரா திட்டம்

  • முத்ரா திட்டத்தின் கீழ் 55 கோடி பயனாளிகளுக்கு ரூ.34 லட்சம் கோடி வரை கடனளிக்கப்பட்டுள்ளது.
  • முத்ரா திட்டம் – 2015

புது முன்முயற்சி

  • நிதித்துறையில் உரிமை கோரப்படாத சொத்துகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கான உங்கள் பணம் உங்கள் உரிமை என்ற புதிய முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த புதிய முன்முயற்சி 3 மாதத்திற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது.

விக்ரம் 1

  • ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கிய இந்தியாவின் முதல் தனியார் சுற்றுவட்டப்பாதை ராக்கெட்டான விக்ரம் 1 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் தனியார் துணை சுற்றுவட்டப்பாதை ராக்கெட் – விக்ரம் S
  • 2வது தனியார் ராக்கெட் –  அக்னிபான்

சக்தி வாய்ந்த நாடுகள் 2025

  • உலக சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • முதலிடம் – அமெரிக்கா
  • இரண்டாமிடம் – சீனா
  • நான்காமிடம் – ஜப்பான்

ஒருங்கிணைந்த நிதி நகரம்

  • இந்தியாவின் முதல் நிதி நகரமாக ஆந்திராவின் அமராவதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா

Vetri Study Center Current Affairs - Polio

  • போலியோ இல்லாத நாடாக இந்தோனேசியாவினை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா போலியோ இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட ஆண்டு – 2014

காது கேளாதோர் கோடை ஒலிம்பிக் போட்டி

  • ஜப்பானில் நடைபெற்ற 23வது காது கேளாதோர் கோடை ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 9 தங்கம் உட்பட 20 பதக்கங்களை வென்றுள்ளது.

ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை

  • FIH ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைக்கான சின்னமான காங்கேயன் வெளியிடப்பட்டுள்ளது.
  • இப்போட்டியானது சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது.

முக்கிய தினம்

சர்வதேச ஜாகுவார் தினம் (International Jaguar Day) – நவம்பர் 29

Related Links

Leave a Comment