Daily Current Affairs
Here we have updated 30th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பொருநை அருங்காட்சியகம்

- டிசம்பர் 20-ல் பொருநை அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட உள்ளது.
கருப்பு புலி
- முற்றிலும் கருப்பு நிறத்திலான அரியவகை புலியானது ஒடிசாவில் கண்டறியப்பட்டுள்ளது.
ராமர் சிலை
- உலகின் உயரமான வெண்கல ராமர் சிலையானது கோவாவில் திறக்கப்பட்டுள்ளது.
- ராமர் சிலையின் உயரம் 77 அடி உயரமுடையதாக அமைக்கப்பட்டுள்ளது.
- உலகின் உயரான சிலையான சர்தார் வல்லபாய் படேல் சிலையை செதுக்கிய சிற்பி ராம் வஞ்சி சுதார் இந்த ராமர் சிலையை செதுக்கியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
- 2025-26ஆம் நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்தியா 8.2% பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- முதலாவது காலாண்டு பொருளாதார வளர்ச்சி – 7.8%
எஸ்.முரளிதர்
- ஐ.நா.வால் இஸ்ரேல், பாலஸ்தீனம் விவகாரத்தில் உள்ள மனித உரிமை மீறல்களை விசாகரிக்க சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
- இதன் தலைவராக எஸ்.முரளிதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
G20 மாநாடு 2025
- தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்கில் நகரில் நடந்த G20 மாநாட்டில் அமெரிக்கா பங்கு கொள்ளவில்லை.
தொடர்புடைய செய்திகள்
- G20 மாநாடு 2026 – மியாமி (அமெரிக்கா)
FIFA U-17 உலகக் கோப்பை

- கத்தாரில் நடைபெற்ற FIFA U-17 உலகக் கோப்பை போட்டியில் போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- Federation Internationale de Football Association – 1904
அமெரிக்கா தடை
- மூன்றாம் உலக நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற தடை விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகள்
இந்து திருமணச் சட்டம் – 1955