Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th and 29th August 2025

Daily Current Affairs 

Here we have updated 28th and 29th August 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

QR குறியீடு சீருடை

Vetri Study Center Current Affairs - QR code uniform

  • திருச்சியின் இடமலை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் QR குறியீடு சீருடை வழங்கப்பட்டுள்ளது.

அரோகன் திட்டம்

  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) அரோகன் திட்டத்தினை தொடங்கியுள்ளது.
  • சுங்கச்சாவடியில் பணியுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி வழங்கும் திட்டம் ஆகும்.
  • NHAI (National Highways Authority of India) – 1995

கேரள உயர்நீதிமன்றம்

  • நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கேரளா உயர்நீதிமன்றம் வகுத்துள்ளது.

காமன்வெல்த் போட்டி

  • 2030ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடைபெற உள்ளது.

ஒலிம்பிக் போட்டி 2036

  • 2036ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

வரதட்சணை கொடுமை

Vetri Study Center Current Affairs - Dowry cruelty

 

  • வரதட்சணை கொடுமையால் அதிகமாக உயிர் இழந்துள்ள பெண்கள் பட்டியல் 2022ன் படி உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

வளமான கிராமங்கள்

  • வளமான கிராமங்கள் திட்டத்தின் இரண்டாம் பகுதி தொடங்கப்பட உள்ளது.
  • வளமான கிராமங்கள் (துடிப்பான கிராமங்கள்) – 2023
  • எல்லையோர கிராமக்கள் கிராமங்களை விட்டு வெளியேறாமல் இருக்க தொடங்கபட்ட திட்டம் ஆகும்.

வருமான வரிச்சட்டம் 2025

  • புதிய வருமான வரிச்சட்டம் 2025ஆனது 1 ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வர உள்ளது.
  • வருமான வரிச்சட்டம் 1961-ற்கு பதிலாக இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

ஸ்வநிதி திட்டம் 

  • மத்திய அரசானது ஸ்வநிதி திட்டத்தினை 2030 ஆண்டு வரை நீட்டித்துள்ளது.
  • சாலையோர வியாபாரிகளுக்கு நிதியதவி அளிப்பதற்காக 1 ஜூன் 2020-ல் தொடங்கப்பட்டது.

மேலும் இதற்கு வழங்கப்படும் கடன்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட தொகைஉயர்த்தப்பட்ட தொகை
முதல் முறைரூ.10,000ரூ.15,000
இரண்டாவது முறைரூ.20,000ரூ.25,000
மூன்றாவது முறைரூ.50,000ரூ.50,000

தேசிய ஆயுர்வேத தினம்

Vetri Study Center Current Affairs - National Ayurveda Day

  • ஆண்டுதோறும் செப்டம்பர் 23 அன்று தேசிய ஆயுர்வேத தினமாக கொண்டாடப்பட உள்ளது.

கேலோ இந்தியா நீர் விளையாட்டு விழா

  • கேலோ இந்தியா நீர் விளையாட்டு விழாவின் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தினை மத்தியப்பிரதேசம் வென்றுள்ளது.
  • இப்போட்டியானது ஸ்ரீநகரின் தால் ஏரியில் நடைபெற்றது.

முக்கிய தினம்

தேசிய விளையாட்டு தினம் (National Sports Day) – ஆகஸ்ட் 29

Related Links

Leave a Comment