Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 30th August 2025

Daily Current Affairs 

Here we have updated 30th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பிறப்பு விகிதங்கள்

Vetri Study Center Current Affairs - Birth rates

  • பிறப்பு விகிதங்கள் குறைந்து வருவதால் குழந்தைகள் பள்ளிச்சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது.
  • இதனால் 3 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளின் பள்ளிச்சேர்க்கையானது 25 லட்சம் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2021 இல் இந்தியாவின் பிறப்பு விகிதம் – 17.6
  • 2021 இல் தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் – 13.8

தொழில்கள் கணக்கெடுப்பு

  • 2023-24 ஆம் ஆண்டிற்கான தொழில்கள் கணக்கெடுப்பின் படி தமிழ்நாடு 15.43% என்ற அளவுடன் தொழிற்சாலைகள் எண்ணிக்கை என்ற அளவில் இந்திய மாநிலங்களுள் முதலிடம் பிடித்துள்ளது.
  • தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 15.24% என்ற அளவில் முதலிடத்தில் உள்ளது.

மாணவர்-ஆசிரியர் விகிதம்

  • தமிழ்நாட்டில் மாணவர்-ஆசிரியர் விகிதம் 23:1 என்றவாறு உள்ளதாக தேசிய கல்விக்கொள்கை 2020 தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் மாணவர்-ஆசிரியர் விகிதம் 30:1 என்றவாறு உள்ளது.

அஜித் குமார் மொஹந்தி

  • அணுசக்தி ஆணைய தலைவரான அஜித் குமார் மொஹந்தியின்பதவிக்காலமானது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதர்

Vetri Study Center Current Affairs - Dinesh K. Patnaik

  • கனடாவுக்கான இந்திய தூதராக தினேஷ் கே.பட்நாயக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்தியாவுக்கான கனடா தூதராக கிறிஸ்டேபார் கூட்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • ரஷ்யாவுக்கான இந்திய தூதர் – வினய்குமார்
  • அமெரிக்காவுக்கான இந்திய தூதர் – வினய் குவாத்ரா
  • ஐ.நாவிற்கான இந்திய தூதர் – பர்வதனேனி ஹரீஷ்
  • இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் – செர்ஜியா கோர்

ஆயுட்காலம்

  • இந்தியாவில் காற்று மாசுபாட்டினை குறைத்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நோய்  அதிகரிப்பு

  • கேரளாவில் பீரிமரி அமிபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற மூளைக்காய்ச்சல் நோய் அதிகரித்து வருகிறது.
  • இந்நோயானது நிக்லேரியா பவுலேரி என்ற அமீபா மூலம் பரவுகிறது.

காற்றாலை மின் உற்பத்தி

  • காற்றாலை மின் உற்பத்தியல் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

கரு கோடை விழா

  • லடாக்கின் கார்கிலில் கருகோடை விழா நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • லடாக்கில் புதிதாக ஏற்படுத்தப்டட 5 மாநிலங்களோடு மொத்தம் 7 மாநிலங்கள் உள்ளன.

பிரைட் ஸ்டார் பயிற்சி

  • இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து நடத்தும் பிரைட் ஸ்டார் பயிற்சி எகிப்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா மற்றும் எகிப்து இடையே  – சைக்ளோன்
  • இந்தியா மற்றும் சீனா இடையே – ஹேண்ட் இன் ஹேண்ட்

ஆசிய ஹாக்கி போட்டி

Vetri Study Center Current Affairs - Asian Hockey Championship

  • ஆசிய ஹாக்கி போட்டியானது பீகாரில் நடைபெறுகிறது.

முக்கிய தினம்

சர்வதேச திமிங்கல சுறா தினம் (Whale Shark Day) – ஆகஸ்ட் 30

Related Links

Leave a Comment