Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 28th October 2025

Daily Current Affairs 

Here we have updated 28th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

காபி உற்பத்தி

Vetri Study Center Current Affairs - Coffee Production

  • காபி உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது.
  • தமிழகத்தில் நீலகிரி, ஆனைமலைகள், சேர்வராயன் மலைகளில் காபி விளைவிக்கப்படுகிறது.

காபி உற்பத்தி பட்டியல்

  • முதலிடம் – கர்நாடகா
  • இரண்டாமிடம் – கேரளா

தொடர்புடைய செய்திகள்

  • உலக காபி உற்பத்தியில் இந்தியா 7வது இடத்தை வகிக்கிறது.

காபியில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன.

  1. அராபிகா – தரம் மிக்கது (இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுவது)
  2. ரொபஸ்டா – தரம் குறைந்த வகை

வேளாண் வளர்ச்சி விகிதம்

  • 2021-24-ல் தமிழகத்தின் வேளாண் வளர்ச்சி விகிதம் 5.66%மாக உயர்ந்துள்ளது.
  • 2012-13 முதல் 2020-21 வரை வேளாண் வளர்ச்சி 1.36%மாக இருந்தது.

புற்றுநோய் தடுப்பூசி

  • தமிழகத்தில் 14 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
  • இம்முயற்சியை மேற்கொள்ளும் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது.

தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான்

  • பழங்குடியின மக்களின் வாழ்க்கைத் தரத்தை  உயர்த்த தார்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான் திட்டம் அக்டோபர் 2, 2024-ல் தொடங்கப்பட்டது.

குறிக்கோள்கள்:

  • சுகாதாரம், கல்வி மற்றும் அங்கன்வாடி வசதிகளை மேம்படுத்துதல்.
  • உள்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.
  • வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல்.

இலவச எண்

  • போஷன் அபியான், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டங்களின் இலவச தொடர்பு எண் 1515 என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குழந்தைகள், பெண்களின் ஊட்டசத்தினை குறைபாடுகளை போக்க போஷன் அபியான் தொடங்கப்பட்டது.
  • போஷன் அபியான் – 8 மார்ச் 2018
  • பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா – 2010

CMS-03

Vetri Study Center Current Affairs - CMS-03

  • நவம்பர் 2-ல் இராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோளான CMS-03 விண்ணில் ஏவப்பட உள்ளது.
  • இந்த செயற்கைக்கோளை LVM3 ஆல் விண்ணில் ஏவப்பட உள்ளது.

மனதின் குரல்

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை

150வது ஆண்டு விழா

  • வந்தேமாதரம் பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இதன் நூற்றாண்டு விழா நவம்பர் 7-ல் கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
  • இப்பாடலினை ஏழுதியவர் – பங்கிம் சந்திர சாட்டர்ஜி
  • பாடியவர் – ரவிந்திரநாத் தாகூர்
  • 1896-ல் கொல்கத்தா மாநாட்டில் முதல் முறையாக பாடப்பட்டது.
  • இதன் 150வது ஆண்டு விழா

காஷ்மீர் இணைவு

  • காஷ்மீர் இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தம் அக்டோபர் 26-ல் கையெழுத்தானது.

திரிசூல் பயிற்சி

  • திரிசூல் பயிற்சியை இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, கடற்படை இணைந்து பாகிஸ்தான் எல்லை பகுதியான சர் கிரீக் பகுதியில் நடத்தியுள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

  • 2025ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த நுகர்வோர் வங்கி விருதானது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-விற்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா – 1 ஜூலை, 1955
  • தலைமையகம் – மும்பை

இந்திய கடல்சார் வாரம் 2025

  • அக்டோபர் 27 முதல் 31வரை இந்திய கடல்சார் வாரம் 2025 நிகழ்ச்சி நடைபெறுகிறது.
  • இதன் கருப்பொருள்: ஒருங்கிணைக்கும் பெருங்கடல்கள் ஓர் கடல் சார் பார்வை

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய கடல்சார் தினம் – ஏப்ரல் 5

கமலா ஹாரிஸ்

  • 107 நாட்கள் என்னும் புத்தகத்தினை கமலா ஹாரிஸ் எழுதியுள்ளார்.
  • இவர் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர்

ஆசியான் கூட்டமைப்பு மாநாடு

  • 47வது ஆசியான் கூட்டமைப்பு மாநாடு மலேசியாவின் கோலாம்பூர் நகரில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2026ஆம் ஆண்டு ஆசியான் மற்றும் இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு மேம்பாட்டுக்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேத்தரின் கானோலி

Vetri Study Center Current Affairs - Catherine Connolly

  • இடது சாரி வேட்பாளரான கேத்தரின் கானோலி (Catherine Connolly) அயர்லாந்து நாட்டின் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார்.

புரோவெஸ்னிக் ஏவுகணை

  • அணு சக்தியால் இயங்கும் புரோவெஸ்னிக் ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது.

முக்கிய தினம்

சர்வதேச அனிமேஷன் தினம்  (International Animation Day) – அக்டோபர் 28

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் 2025 – அக்டோபர் 26 முதல் நவம்பர் 1

சொற்கதிர்

  • Auto – தானி

கூடுதல் தகவல்கள்

  • ஆயுஷ்ன் பாரத் திட்டம் – 2018

Related Links

Leave a Comment