Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 29th October 2025

Daily Current Affairs 

Here we have updated 29th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

எதிர்காலத்திற்கு தயாராகு

Vetri Study Center Current Affairs - Ethirkalathirku Thayaragu

  • தமிழகத்தில் 1 முதல் 9 வகுப்பு வரை மாணாக்கார்களுக்காக எதிர்காலத்திற்கு தயாராகு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்சிந்தனை வினாக்கள் மற்றும் கற்றல் அடைவுத் தேர்வுகளை எதிர்கொண்டு மாணாக்கர்களின் திறனை மேம்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

8வது ஊதியக்குழு

  • 8வது ஊதியக்குழுவின் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஊதியக்குழுவின் உறுப்பினர்களாக புலக்கோஷ், பஞ்கஜ் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

  • 7வது ஊதியக்குழுவின் தலைவர் – ஏ.கே.மாத்தூர்

SIR

  • தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • SIR –  Special Intensive Revision

தொடர்புடைய செய்திகள்

  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950ன் பிரிவு 21(3)ன் கீழ் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெறுகிறது.

செயற்கை மழை

  • டெல்லியில் நடத்தப்படவிருந்த செயற்கை மழை சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
  • செயற்கை மழை பொழிய வைப்பதற்கு சோடியம் குளோரிட், சில்வர் அயோடைட் வேதிப்பொருட்கள் மேகத்தின் மீது தூவப்படுகிறது.

விதி 124 (2)

  • நவம்பர் 23-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் ஓய்வு பெற உள்ளார்.
  • 53வது தலைமை நீதிபதியாக சூர்யகந்த் நியமனம் செய்யப்பட உள்ளார்.
  • தலைமை நீதிபதி நியமன விதி – 124 (2)

தொடர்புடைய செய்திகள்:

  • நீதிபதி ஓய்வு வயது – 65

பால் பியா

  • கேமரூன் நாட்டின் அதிபராக பால் பியா பதவியேற்றுள்ளார்.
  • இவர் 92வயதில் பதவியேற்றுள்ள நிலையில் இவர் உலகின் மிகவும் வயதான அதிபராக மாறியுள்ளார்.

எட்வினா ஜெய்சன்

Vetri Study Center Current Affairs - Edwina Jayson

  • பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் போட்டியின்  மெட்லி ரிலேவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்வினா ஜெய்சன் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
  • இவர் 400மீ ஓட்டத்திலும் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

புயல் பாதிப்பு

  • ஜமைக்கா நாடானாது மெலிசா புயலால் பாதிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

உலக பக்கவாத தினம்  (World Stroke Day) – அக்டோபர் 29

சொற்கதிர்

  • Share Auto – பங்குத்தானி

Related Links

Leave a Comment