Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 30th October 2025

Daily Current Affairs 

Here we have updated 30th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நிதி வழங்கல்

  • தேசிய பல்லுயிர் ஆணையமானது தமிழ்நாட்டில் செம்மரங்களை வளர்க்கும் 18 விவசாயிகளுக்கு ரூ.55 லட்சம் வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய பல்லுயிர் ஆணையம் – 2003
  • இதன் தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.
  • பல்லூயிரிகளை பாதுகாத்தல் மற்றும் அதனுடைய நிலையான பயன்பாட்டினை மேம்படுத்துதல் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் நோக்கமாகும்.

புஷ்கர் கால்நடை கண்காட்சி

Vetri Study Center Current Affairs - Pushkar Fair

  • ராஜஸ்தானில் புஷ்கர் கால்நடை கண்காட்சி நடைபெற்றுள்ளது.

சர்வதேச நடன விழா

  • மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் நகரில் சர்வதேச நடன விழாவான உத்பவ் உத்சவ் நடைபெற்றுள்ளது.

சஞ்சீவ் கபூர்

  • சிறந்த வேளாண் உணவு முன்னோடி விருது சஞ்சீவ் கபூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • உலக உணவு பரிசு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இராணுவ வலிமை குறியீடு

  • உலக இராணுவ வலிமை குறியீட்டில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
  • இப்பட்டியலில் இந்தியா 4வது இடம் பிடித்துள்ளது.

மெட்ரோ நெட்வொர்க்

  • டெல்லி மெட்ரோ இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க்காக மாறியுள்ளது.
  • இதன் நீளம் – 394 கி.மீ

தொடர்புடைய செய்திகள்

உலகின் மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க் நாடுகள்

  • முதலிடம் – சீனா
  • இரண்டாமிடம் – அமெரிக்கா (1400 கி.மீ.)
  • மூன்றாமிடம் – இந்தியா (1065 கி.மீ.)
  • இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் சேவை – கொல்கத்தா (1984)
  • நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவை – கொல்கத்தா
  • நீர் மெட்ரோ – கொச்சி
  • தமிழ்நாட்டின் முதல் மெட்ரோ – சென்னை

வியட்நாம்

  • சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மாநாடானது வியட்நாமில் நடைபெற்றுள்ளது.

உறுப்பினராக இணைவு

  • கிழக்கு திமோர் நாடானது ஆசியான் கூட்டமைப்பில் புதிய உறுப்பினராக இணைந்துள்ளது.
  • இக்கூட்டமைப்பின் 11வது உறுப்பினராக இணைந்துள்ளது.
  • ஆசியாவின் தலைமைப்பொறுப்பினை பிலிப்பைன்ஸ் ஏற்றுக்கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

  • ஆசியான் கூட்டமைப்பு – 8 ஆகஸ்ட் 1967

நைட்ஹுட் பட்டம்

Vetri Study Center Current Affairs - james anderson

  • இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு நைட்ஹுட் பட்டம் (Knighthood) வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

உலக சிக்கன தினம்  (World Savings Day) – அக்டோபர் 30

சொற்கதிர்

  • VAN – மூடுந்து / கூண்டுந்து

Related Links

Leave a Comment