Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 2nd September 2025

Daily Current Affairs 

Here we have updated 2nd September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வெங்கடராமன்

Vetri Study Center Current Affairs - Venkatraman

  • தமிழக காவல்துறை சட்ட ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விருந்தாவணி வஸ்திரா

  • இங்கிலாந்து மீயூசியத்தில் உள்ள விருந்தாவணி வஸ்திரா இந்தியாவிற்கு எடுத்து வரப்பட உள்ளது.
  • இந்த வஸ்திரா அசாமில் உள்ள ஒரு பட்டு வகை ஆகும்.
  • விருந்தாவணி வஸ்திரா கடவுள் கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துக் கூறும் கலை வடிவம் ஆகும்.

ஆதி வாணி செயலி

  • பில், முண்டாா, கோண்டி, சாந்தல், கந்தா, கரோ ஆகிய பழங்குடியினர் பேசுகின்ற மொழிகளை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மொழிபெயர்க்க பழங்குடியினர் விவகார அமைச்சகமானது ஆதிவாணி என்ற செயலியை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பழங்குடியினர்பேசும் மொழி
பில்பிலி
கோண்ட்கோண்டி
முண்டாமுண்டாரி
சாந்தல்சந்தாலி
கந்தாகுய்
காரோகரோ

புதிய வலையமைப்பு

  • குடிமைப்பணி தேர்விற்காக பிரதிபா சேது என்ற வலைதள அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த வலையப்பில் குடிமைப்பணி தேர் இறுதிகட்ட தகுதிப் பட்டியலில் இடம் பெறாத மாணவர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.
  • இப்பட்டியல் மூலம் தனியார் நிறுவனங்கள் தமக்கு தேவையான நபர்களை பணிக்கு அமர்த்திக்கொள்ளலாம்.

பாதுகாப்பான நாடுகள் பட்டியல் 2025

  • உலகில் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்தியா 115வது இடம் பிடித்துள்ளது.

பாட்மின்டன் உலக சாம்பியன் ஷிப்

Vetri Study Center Current Affairs - Satwik Sairaj, Chirag Shetty

 

  • பிரான்ஸில் நடைபெற்ற பாட்மின்டன் உலக சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணை வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.

முக்கிய தினம்

உலக தேங்காய் தினம் (World Coconut Day) – செப்டம்பர் 2

Related Links

Leave a Comment