Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 3rd and 4th August 2025

Daily Current Affairs 

Here we have updated 3rd and 4th August 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

Vetri Study Center Current Affairs - Heart Transplant

  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை 2024-ல் சிறந்த முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
  • உலகளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.
  • முதல் இரு இடங்களை அமெரிக்கா, சீனா நாடுகள் முறையே பிடித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தினம் – ஆகஸ்ட் 3

அன்பு கரங்கள் திட்டம்

  • பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்காக மாதம் ரூ.2000 வழங்க தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

வேர்களைத் தேடி திட்டம்

  • தமிழ்நாட்டின் கலை, கலாச்சராத்தினை அறிந்து கொள்ள 99 அயலகத்தமிழர்கள் வேர்களைத்தேடி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

 

  • வேர்களை தேடி திட்டம் – 24.05.2023

லெவல் அப் திட்டம்

  • லெவல் அப் திட்டத்தில் மாணவர்களின் கற்ற அடைவுகளை உரிய கால இடைவெளியில் தெரிவிக்க வேண்டுமென்று கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
  • கடந்த ஜீலை 2025 அன்று 6 முதல் 8வரையிலான மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த லெவல் அப் (Level Up) திட்டமானது தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

திருநங்கையர் கொள்கை

  • திருநங்கையர்களுக்கான கொள்கையானது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் திருநங்கை நலவாரியம் தமிழக அரசால் 15.04.2008ல் உருவாக்கப்பட்டது.

மருத்துவ முகாம்

  • Vetri Study Center Current Affairs - Nalam Kakkum Stalin
  • நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் சனிக்கிழமையன்று மருத்து முகாம்கள் நடைபெற உள்ளன.
  • இத்திட்டத்தின் கீழ் 17 மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.
  • 1256 முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
  • தொடங்கப்பட்ட நாள் : 02.08.2025
  • தொடங்கி வைத்தவர்: மு.க.ஸ்டாலின்

வினோத்குமார்

  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வினோத்குமார் பதவியேற்றுள்ளார்.
  • தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது.
  • அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை தலைமை நீதிபதி உட்பட 75 பேர் ஆவர்.

நிலையான விவசாய தினம்

  • எம்.எஸ். சுவாமிநாதனின் பிறந்த நாளான ஆகஸ்ட் 7 நிலையான விவசாய தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் உணவு, அமைதிக்கான சர்வதேச விருது எம்.எஸ் சுவாமிநாதன் பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய தளம்

  • அண்மையில் ரததிய ரி தெரி (Ratadiya Ri Dheri) என்ற சிந்து சமவெளி தளமானது ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மர் என்ற பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

சோனாலி மிஸ்ரா

Vetri Study Center Current Affairs - Sonali Mishra

  • ரயில்வே பாதுகாப்பு படையின் முதல் பெண் தலைமை இயக்குநராக சோனாலி மிஸ்ரா பதவியேற்றுள்ளார்.

முக்கிய தினம்

தேசிய நண்பர்கள் தினம் (National Friendship Day) –  ஆகஸ்ட் 3

உடல் உறுப்பு தான தினம் (Organ Donation Day) – ஆகஸ்ட் 3

Related Links

Leave a Comment