Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th August 2025

Daily Current Affairs 

Here we have updated 5th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ராஜராஜ சோழன் சிலை

Vetri Study Center Current Affairs - Raja Raja Cholan

  • தஞ்சாவூரில் 35 அடி உயர ராஜராஜ சோழன் சிலை நிறுவப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மின்சார வாகனம்

  • தமிழ்நாட்டின் முதல் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை வியட்நாமின் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் அமைத்துள்ளது.
  • மின் வாகன தலைநகரமாக தமிழகம் உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • நாட்டின் மொத்த மின் வாகன உற்பத்தியில் 40% தமிழகத்திலிருந்து உற்பத்தியாகிறது.

நடுகற்கள் கண்டெடுப்பு

  • சமீபத்தில் ஆம்பூரை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்கள், பானை ஓடுகள், இரும்பு கசடுகள், செங்கற்கள் கண்டெடுக்கபட்டுள்ளது.
  • இது விஜயநகர காலத்தினை சேர்ந்ததாகும்.

சிறுதானிய இயக்கம்

  • தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின் கீழ் 25 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டில் சிறுதானிய இயக்கமானது 2023-24ல் தொடங்கப்பட்டது.
  • சிறுதானிய மண்டலம் 1ல் 12 மாவட்டங்கள் உள்ளன
  • சிறுதானிய மண்டலம் 2ல் 13 மாவட்டங்கள் உள்ளன

தொடர்புடைய செய்திகள்

  • சிறுதானிய ஆண்டு – 2023 (ஐக்கிய நாடு சபை)
  • தேசிய சிறு தானிய ஆண்டு – 2018

போர் விமானங்கள்

Vetri Study Center Current Affairs - C-295

  • ஸ்பெயின் நாட்டிலிருந்து 16வது C-295 விமானத்தினை இந்தியா பெற்றுள்ளது.

TN Rising

  • பிராந்திய முதலீட்டு மாநாட்டை ஏற்பாடு செய்ய தமிழ்நாடு அரசு TN Rising என்ற நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.

Crew-11

  • லடாக்கில் விளையக்கூடிய சீபக்கதோர்ன் மற்றும் பக்வீட் விதைகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆய்வு செய்ய எடுத்து செல்லப்பட்டது.
  • இவ்விதையானது நாசாவின் Crew-11 விண்கலம் மூலம் விண்வெளிக்கு எடுத்து செல்கிறது.

தொடர்புடைய செய்திகள்

விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்ட பயிர்கள்

  • ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் BSLV C 60 ராக்கெட் மூலம் காரமணி விதைகளை விண்வெளி மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
  • ஆக்சியம் திட்டத்தின் கீழ் சுபான்ஷு சுக்லா வெந்தயம் மற்றும் பச்சை பயிறு விதைகளை விண்வெளி மையத்திற்கு எடுத்துச் சென்றார்.

புல்லட் இரயில்

  • இந்தியாவின் முதல் அதிவேக புல்லட் இரயில் திட்டம் மும்பை மற்றும் அகமதபாத் இடையே தொடங்கப்பட்டது.
  • ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மீன் உற்பத்தி

  • சீனாவிற்கு அடுத்தபடியாக மீன் உற்பத்தியில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது.

ராம்சார் மாநாடு

  • 15வது ராம்சார் மாநாட்டினை ஜிம்பாப்வே நடத்த உள்ளது.

மானிய திட்டம்

  • சீனாவில் பிறப்பு விகிதத்தினை அதிகரிக்க அந்நாட்டு அரசு மானிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

முரளி ஸ்ரீ சங்கர்

Vetri Study Center Current Affairs - C-295

  • கஜகஸ்தானில் நடைபெற்ற கொசானோவ் நினைவு தடகள போட்டியில் முரளி ஸ்ரீ சங்கர் 7.94மீ நீளம் தாண்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Related Links

Leave a Comment