Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 5th and 6th October

Daily Current Affairs 

Here we have updated 5th and 6th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தனிப்பெருங்கருணை தினம்

 

  • வள்ளலார் பிறந்தநாளான அக்டோபர் 5 ஆண்டுதோறும் தனிப்பெருங்கருணை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அழிந்து வரும் இனங்கள்

  • அழிந்து வரும் விலங்கினங்களான கூம்புத் தலை மஹ்சீர்,  சிங்கவால் குரங்கு, கழுதைப்புலி, மெட்ராஸ் முள்ளம்பன்றி ஆகியவற்றை பாதுகாக்க தமிழக அரசு ரூ.1 கோடியை ஒதுக்கியுள்ளது.
விலங்கினங்கள்காணப்படும் இடம்
கூம்புத் தலை ஹம்பட்-ஹெட் மஹ்சீர் மீன்மேயார் ஆறு
சிங்கவால் குரங்குமேற்கு தொடர்ச்சி மலை
மெட்ராஸ் முள்ளம்பன்றிதமிழ்நாடு, ஆந்திரம், கேரளா
கழுதைப்புலிமுதுமலை புலிகள் காப்பகம்

சிறப்பு விசாரணைக்குழு

Vetri Study Center Current Affairs - s Asra Garg

  • கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக விசாரணை செய்ய அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் குழு அமைக்கபட்டுள்ளது.

காற்றாலை

  • காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மிக உயர்ந்த ஆதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது.
  • தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மே முதல் அக்டோபர் வரை காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

விவசாய தற்கொலை

  • இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக NCRB 2023 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2023-ல் 1,71,418 பேர் தற்கொலை செய்துள்ளன.
  • NCRB (National Crime Records Bureau) – 11 மார்ச் 1986

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகள் தற்கொலை

  • மகாராஷ்டிரா – முதலிடம்
  • கர்நாடகா – இரண்டாமிடம்
  • தமிழ்நாடு – ஐந்தாமிடம்.

பால்பொருட்கள் உற்பத்தி ஆலை

  • ஹரியானாவில் புதிய பால்பொருட்கள் உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய பால் பொருட்கள் உற்பத்தி ஆலையாகும்.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய பால்வளம் மேம்பாட்டு வாரியம் – 1970
  • 1966இல் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நாடு தழுவிய வெண்மைப் புரட்சியை தொடங்கி வைத்தார்.
  • வெண்மைப் புரட்சியின் தந்தை – வர்கீஸ் குரியன்
  • உலகின் மிகப் பெரிய பால் மாடுகள் வளர்ப்பு நாடாக இந்தியா திகழ்கிறது.
  • தமிழ்நாடு பால்வள மேம்பாட்டுக் கழகம் – 1972
  • 1981இல் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பாக விரிவுபடுத்தப்பட்டது.

S 400

  • இந்தியா ரஷ்யாவில் தயாரிக்கப்படும் S 400 வான்பாதுகாப்பு அமைப்புகளை கூடுதலாக வாங்க திட்டமிட்டுள்ளது.

மீன் பிடித்தல்

Vetri Study Center Current Affairs - (International Conference on Fisheries Management

  • உலகளவில் மீன்பிடி பட்டியலில் இந்தியா 8% பங்களிப்புடன் இரண்டாமிடம் பிடித்துள்ளது.

மனித உரிமைகள் கவுன்சில்

  • 60வது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டமானது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 24 அக்டோபர் 1945-ல் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டுள்ளது.
  • ஐ.நா. சபை நாள் அக்டோபர் 24
  • மனித உரிமைகள் ஆணையம் – 10 டிசம்பர் 1948
  • பொது சபை தீர்மானம் 217A-ன்படி உருவாக்கப்பட்டது.
  • மனித உரிமைகள் பேரறிக்கையில் 30 உறுப்புகள் (articles) உள்ளன.
  • மனித உரிமைகள் தினம் – டிசம்பர் 10

வினீத் ஜோஷீ

  • நுழைவுத் தேர்விற்காக மாணவர்கள் பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் நிலையை மாற்றம் ஏற்படுத்த வினித் ஜோஷீ தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

சுபான்ஷு சுக்லா

Vetri Study Center Current Affairs - Shubhanshu Shukla

  • பள்ளி மாணவர்களுக்கான விக்ஷித் பாரத் கட்டமைப்பிற்கான விளம்பர தூதராக சுபான்ஷு சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற முதல் இந்தியர் இவராவார்.

சானே தகாய்ச்சி

  • ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சானே தகாய்ச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

உலக ஆசிரியர்கள் தினம் (World Teachers Day) – அக்டோபர் 5

  • தேசிய ஆசிரியர்கள் தினம் – செப்டம்பர் 5
  • 1994 முதல் கடைபிடிக்கப்படுகிறது.
  • கருப்பொருள்: Recasting teaching as a collaborative profession

உலக மூளைக்காய்ச்சல் தினம் (World Meningitis Day) – அக்டோபர் 5

உலக வாழ்விட தினம் (World Habitat Day) – அக்டோபர் 6

  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் திங்கட்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

முக்கிய தினம்

  • Rover – தரையூர்தி

 

Related Links

Leave a Comment