Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th September 2025

Daily Current Affairs 

Here we have updated 6th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக காவலர்கள் தினம்

Vetri Study Center Current Affairs - Tamil Nadu Police Day

  • ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ம் நாள் தமிழக காவலர் நாள் கொண்டாடப்படுகிறது
  • 6 செப்டம்பர் 1859-ல் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றபட்டதன் நினைவாக தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஐஐடி மெட்ராஸ்

  • கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்படும் NIRF தரவரிசை பட்டியிலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்நிகழ்வானது ஏழாவது முறையாக நிகழ்ந்துள்ளது.
  • இரண்டாமிடம் – இந்திய அறிவியல் கழகம் (IISc), பெங்களூர்
  • மூன்றாமிடம் – ஐஐடி பாம்பே

தொடர்புடைய செய்திகள்

ஐஐடி மெட்ராஸ் பெற்ற விருதுகள்

  • புதுமை கண்டுபிடிப்புக்கான விருதுகள் – முதலிடம்
  • நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் – முதலிடம்
  • ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பிரிவு – இரண்டாமிடம்

தமிழ்நாடு முதலிடம்

  • NIRF தரவரிசை பட்டியிலில் முதல் 100 இடங்களில் 17 இடங்கள் பிடித்து மாநிலங்கள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
  • NIRF – National Institutional Ranking Framework
  • இரண்டாமிடம் – மகாராஷ்டிரா (11)
  • மூன்றாமிடம் – உத்திரப்பிரதேசம் (9)

சட்ட பூர்வ அனுமதி

  • 9 ஜனவரி 2015-க்கு முன் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களுக்கு சட்ட பூர்வ அனுமதியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

நிதியுதவி

  • அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில ரூ.3.60 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
  • அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டம் – 2025

பிறப்பு விகிதம்

Vetri Study Center Current Affairs - Birth rates

  • SRS 2023 அறிக்கையின்படி தற்போது இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
  • இந்தியாவின் பிறப்பு விகிதம் – 18.40
  • SRS – Sample Registration System

மாநிலங்கள் அடிப்படையில்

  • அதிக பிறப்பு விகிதம் – பீகார் (28.4)
  • குறைந்த பிறப்பு விகிதம் – தமிழ்நாடு (12)

மொத்த கருவுறுதல் விகிதம் (TFR)

  • இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.9 என்ற அளவில் உள்ளது.

மாநிலங்கள் அடிப்படையில்

  • அதிக மொத்த கருவுறுதல் விகிதம் – பீகார் (2.8)
  • குறைந்த மொத்த கருவுறுதல் விகிதம் – டில்லி (1.2)
  • தமிழ்நாடு மொத்த கருவுறுதல் விகிதம் – 1.3 (1.4 லிருந்து)

முதியோர் மக்கள் தொகை

  • இந்தியாவில் அதிக முதியோர்கள் கேரளாவில் வாழ்கின்றன.
  • இதனால் கேரளா அதிக முதியோர் மக்கள் தொகை கொண்ட மாநிலமாக மாறியுள்ளது.

விபத்து நிதியுதவி

  • சாலை விபத்தில் காயமடைந்தோருக்கு முதல் 7 நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில்மருத்துவ உதவி செய்ய மத்திய அரசு திட்டமொன்றை உருவாக்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் 15லட்சம் வரை செலவிடப்படுகிறது.

விண்வெளி நகரம்

  • ஆந்திராவின் திருப்பதி அருகே விண்வெளி நகரம் அமைக்கப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
  • இங்கிருந்து தனியார் செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளது.

ஆண்ட்ரு ஹால்னஸ்

  • ஜமைக்கா நாட்டின் பிரதமாக ஆண்ட்ரு ஹால்னஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அனுடின் சார்ன்விரகுல்

  • தாய்லாந்து நாட்டின் பிரதமாக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினம் (International Vulture Awareness Day) – செப்டம்பர் 6

Related Links

Leave a Comment