Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th August 2025

Daily Current Affairs 

Here we have updated 7th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நீலகிரி வரையாடு

Vetri Study Center Current Affairs - Nilgiri Draft Project

  • சமீபத்தில் எடுக்கப்பட்ட 2வது நீலகிரி வரையாடு கணெக்கெடுப்பின்படி இந்தியாவில் 1303 நீலகிரி வரையாடுகள் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • நீலகிரி வரையாடு திட்டம் – 2023

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம்

  • 2024-25 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.19% என்றவாறு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2010-11ல் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 13.12% ஆக இருந்துள்ளது.

மாபெரும் தமிழ்க் கனவு திட்டம்

  • மாபெரும் தமிழ்க் கனவு திட்டதில் கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
  • இதன் 3ம் கட்ட நிகழ்ச்சி அனைத்து கல்லூரிகளிலும் நடைபெற உள்ளது.
  • மாபெரும் தமிழ்க் கனவு திட்டம் – 3 பிப்ரவரி 2023

காப்பீடு திட்டம்

  • உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு திட்டமானது தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
  • முதன் முறையாக 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ரெப்போ ரேட்

Vetri Study Center Current Affairs - RBI

  • வங்கிகளுக்கு வழங்கப்படும் வட்டியை குறிக்கும் ரெப்போ ரேட் மாற்றமின்றி 5.5%ஆக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • நிலையான வைப்பு வசதி – 5.25%
  • மார்ஜினல் நிலையான வசதி – 5.75%

தொடர்புடைய செய்திகள்

  • உலக பொருளாதாரத்தின் இந்தியாவின் பங்கு 18%மாக உள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம்

  • 2025-26ஆம் ஆண்டிற்கான பணவீக்கம் 3.1%மாக இருக்குமென ரிசர்வ் வங்கியின் பணவீக்கக் கொள்கைக் குழு கணித்துள்ளது.

சுயசரிதை

  • எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்க்கை வரலாற்றினை பற்றிய இந்தியாவுக்கு உணவளித்த மனிதன் என்ற நூலினை பிரியம்பதா ஜெயக்குமார் என்பவர் எழுதியுள்ளார்

மால்டோவோ

  • ISAவின் 107வது உறுப்பினராக மால்டோவோ நாடானது இணைந்துள்ளது.
  • ISA (International Solar Alliance) – 2015

முக்கிய தினம்

தேசிய கைத்தறி தினம் (National Handloom Day) – ஆகஸ்ட் 07

  • 7 ஆகஸ்ட் 1905-ல் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாக தேசிய கைத்தறி தினம் 2015 முதல் கடைபிடிக்கப்படுகிறது.

Related Links

Leave a Comment