Daily Current Affairs
Here we have updated 8th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

- முதலமைச்சரின் தாயுமானவர் திட்டமானது ஆகஸ்ட் 12-ல் துவங்கப்பட உள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமாகும்.
உப்பு உற்பத்தியாளர்கள்
- இந்தியாவில் அதிக உப்பு உற்பத்தி தொழிலாளர்கள் தமிழ்நாட்டிலும், இராஜஸ்தானிலும் வாழ்கின்றன.
தனிநபர் வருமானம்
- திருத்தப்பட்ட குறியீட்டின் படி தனிபர் வருமான பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம் பிடித்துள்ளது.
- தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் – ரூ.1,96,309
- இந்தியாவின் தனிநபர் வருமானம் – ரூ.1,14,710
- முதலிடம் – கர்நாடகம்
தொடர்புடைய செய்திகள்
- திருத்தப்பட்ட குறியீட்டின் படி பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 2வது இடம் பிடித்துள்ளது.
- சிறுதானியங்கள், கேழ்வரகு, எள், துவரை உற்பத்தி – முதலிடம்
- மக்காச்சோளம், எண்ணெய்வித்துக்கள், கருப்பு, தேங்காய் உற்பத்தி – இரண்டாமிடம்
- குறுதானியங்கள், நிலக்கடலை உற்பத்தி – மூன்றாமிடம்
TUTOZ செயலி
- AI மூலம் இயங்கும் TUTOZ கற்றல் செயலியை IIT பாலக்காடு அறிமுகம் செய்துள்ளது.
- இது இந்தியாவில் AI மூலம் இயங்கும் முதல் கற்றல் செயலி ஆகும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு

- 2025 ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடானது சீனாவில் நடைபெற உள்ளது.
- ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது 15.6.2001-ல் உருவாக்கப்பட்டது.
- இந்த அமைப்பில் 2017-ல் இந்தியா இணைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2023 – இந்தியா
- 2024 – கஜகஸ்தான்
- 2026 – ரஷ்யா
AI நகர குறியீடு
- உலக AI நகர குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது.
- உலக AI நகர குறியீட்டில் பெங்களூரு 25வது இடத்தைப் (இந்தியளவில் முதலிடம்) பிடித்துள்ளது.
வரி விதிப்பு
- அமெரிக்கா நாடானது இந்தியா மீது வரியை 25% உயர்த்தியுள்ளது.
- தற்போது இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி விகிதம் – 50%
- வரி விதிப்பு காரணம் – ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி
மசோதா நிறைவேற்றம்
- அண்மையில் கடல்வழி சரக்கு போக்குவரத்து மசோதா 2025 நிறைவேற்றப்பட்டுள்ளது.
- 1925-ல் உருவாக்கப்பட்ட கடல் சரக்குப் போக்குவரத்து சட்டத்திற்கு பதிலாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடமை பவன்

- சமீபத்தில் சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மத்திய அமைச்சரவை அலுவலக கட்டிடமான கடமை பவன் (கர்தவ்ய பவன்) தில்லியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆரெஷ்னிக் ஏவுகணை
- ஆரெஷ்னிக் ரக ஏவுகணையை ரஷ்யா உருவாக்கியுள்ளது.
முக்கிய தினம்
- வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் (Quit India Movement Day) – ஆகஸ்ட் 08
- சர்வதேச பூனைகள் தினம் (International Cat Day) – ஆகஸ்ட் 08