Daily Current Affairs
Here we have updated 8th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
காசி தமிழ் சங்கம்

- 4வது காசி தமிழ் சங்கம் வாரணாசியில் தொடங்கப்பட உள்ளது.
- தமிழ்நாட்டிற்கும் வாரணாசிக்கும் இடையிலான பழமையான கலாச்சார உறவுகளைக் கொண்டாடும் ஒரு வருடாந்திர நிகழ்ச்சி ஆகும்.
- இந்நிகழ்ச்சி வாரணாசியில் தொடங்கி இராமேஸ்வரத்தில் முடிவடைகிறது.
- தமிழ்கற்போம், அகத்தியர் பயணம் என இரு திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- முதல் காசி தமிழ் சங்கம் – 2022
சிவ விஷ்ணு சாதனை
- கிளிமஞ்சாரோ சிகரத்தினை ஏறி தமிழ்நாட்டின் 5 வயது சிறுவனான சிவ விஷ்ணு சாதனை படைத்துள்ளார்.
- ஆப்பிரிக்காவின் உயர்ந்த மலைச்சிகரத்தினை முத்தமிழ்செல்வியுடன் (எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் பெண்) இணைந்து ஏறியுள்ளார்.
தியாகச் சுவர்
- உடலுறுப்பு தானம் செய்பவர்களை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தியாகச் சுவர்கள் எழுப்பப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- தற்போது சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலக உறுப்பு தான தினம்: ஆகஸ்ட் 13
டிஜிட்டல் பழங்குடியின அருங்காட்சியகம்
- டிஜிட்டல் பழங்குடியின அருங்காட்சியகமானது சத்தீஸ்கர் மாநிலத்தின் நவராய்பபூரில் தொடங்கப்பட உள்ளது.
- இந்தியாவின் முதல் டிஜிட்டல் பழங்குடியின அருங்காட்சியகமாகும்.
- இதற்கு ஷாஹீத் வீர் நாராயண் சிங் பெயரிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
- செயற்கைக்கோள் அடிப்படையில் இணைய சேவைகளை பெறுவதற்கு ஸ்டார் லிங் நிறுவனத்துடன் மகாராஷ்டிரா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
உலக கூட்டுறவு கண்காணிப்பு அறிக்கை 2025
- முதலிடம் – அமுல் நிறுவனம்
- இரண்டாமிடம் – IFFCO நிறுவனம்
இவ்வறிக்கையை சர்வதேச கூட்டுறவு கூட்டணி வெளியிட்டுள்ளது.
ஆய்வுக் கப்பல்

- இக்ஷாக் (INS Ikshak) என்ற ஆய்வுக் கப்பலானது கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ளது.
- இதனை கொச்சி கடற்படை தளத்தில் வைத்து இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- சந்தியாக், நிர்தேஷாக் போன்ற ஆய்வுக் கப்பல்களும் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
ரவி சங்கர்
- 2025ஆம் ஆண்டிற்கான உலக அமைதி தலைவர் விருதானது ரவிசங்கர் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் பாஸ்டன் குளோபல் ஃபோரம் மற்றும் உலக சங்கம் இணைந்து இவ்விருதினை 2015 முதல் வழங்கி வருகிறது.
பிரியம்புதா ஜெயக்குமார்
- The Man Who Fed India என்ற எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தினை பிரியம்புதா ஜெயக்குமார் எழுதியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- பசுமை புரட்சியின் தந்தை – எம்.எஸ்.சுவாமிநாதன்
- பசுமை புரட்சி – 1960
பிலிப்பைன்ஸ்
- கால்மேகி புயலால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிலிப்பைன்ஸ் அவசர நிலையை அறிவித்துள்ளது.
- வியட்நாமில் புயல் கரையை கடந்துள்ளது.
காலநிலை மாற்ற மாநாடு 2025
- பிரேசிலில் வைத்து காலநிலை மாற்ற மாநாடு (COP30) நடைபெற உள்ளது.
G20 உச்சிமாநாடு

- தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் G20 உச்சிமாநாடு 2025 நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- G20 உச்சிமாநாடு 2026 – அமெரிக்கா
டி 20 உலக்கோப்பை
- 2026ல் நடைபெற உள்ள டி 20 உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியினை இந்தியா நடத்த உள்ளது.
முக்கிய தினம்
சர்வதேச கதிரியக்க தினம் (International Day of Radiology) – நவம்பர் 8
- 1895 இல் X-கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டாடுவதற்கு கடைபிடிக்கப்படுகிறது.
- X-கதிர்கள் கண்டுபிடித்தவர் – வில்ஹெல்ம் கான்ராட் ரோன்ட்ஜென்
உலக நகர்ப்புற தினம் (World Town Planning day) – நவம்பர் 8
சொற்கதிர்
குளச்சல் போர் – 1741
- டச்சு கிழக்கிந்திய கம்பெனியை மார்த்தாண்ட வர்மா (திருவிதாங்கூர் மன்னர்) வென்றார்.
வந்தே மாதரம் (தேசியப்பாடல்) – 24 ஜனவரி 1950