Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th and 10th November

Daily Current Affairs 

Here we have updated 9th and 10th November October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ் அகராதியியல் தினம்

Vetri Study Center Current Affairs - Veeramamunivar Statue

  • வீரமாமுனிவரின் பிறந்த நாளான நவம்பர் 8 தமிழ் அகராதியியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • இயற்பெயர்: கான்சுடான்சு ஜோசப் பெசுகி
  • நூல்கள்: தேம்பாவணி, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் (இலக்கண நூல்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்தக் குரு கதைகள், மொழிபெயர்ப்பு நூல்கள்
  • சந்தாசாகிப் இஸ்மத் சன்னியாசி என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு அளித்துள்ளார்.

TAEI 

  • TAEI என்ற செயலியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார்.
  • அவசர மருத்துவ சிகிச்சையின் தரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.
  • TAEI – Tamil Nadu Accident and Emergency Care Initiative

AI செயல் உச்சி மாநாடு

  • புதுதில்லியில் AI செயல் உச்சி மாநாடு 2026 நடைபெறவுள்ளது.
  • இதற்கு மூன்று தூண்களாக மக்கள், கோள், முன்னேற்றம் போன்றவற்றை இந்தியா செயல்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • AI செயல் உச்சி மாநாடு 2025 – பாரீஸ்

உச்சநீதிமன்றம் உத்தரவு

Vetri Study Center Current Affairs - Street dog bites

  • பொது இடங்களில் அலையும் தெருநாய்களை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • விதி 51A(g) – உயிரினங்கள் மீதான இரக்கம்

விலங்குகள் நலவாரியம் Vs நாகராஜா

  • அனைத்து உயிரினங்களுக்கும் உள்ளார்ந்த கண்ணியமும் நிம்மதியாக வாழும் உரிமையும் உண்டு எனக் கூறியுள்ளது.

இந்தியா இணைதல்

  • வெப்பமண்டல காடுகளையுடைய நாடுகளின் வனப்பகுதியினை பராமரிப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட வெப்பமண்டல காடுகள் என்றென்றும் வசதி முயற்சியில் இந்தியா இணைய உள்ளது.

கஞ்சன் ஜங்கா தேசிய பூங்கா

  • IUCNஆல் கஞ்சன் ஜங்கா தேசிய பூங்காவிற்கு இயற்கை உலக பாரம்பரிய தளங்கள் குறித்த சமீபத்திய உலகளாவிய மதிப்பாய்வில் நல்லது என்ற மதிப்பினை அளிக்கப்பட்டுள்ளது.
  • IUCN (International Union for Conservation of Nature) – இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் – 5 அக்டோபர் 1948

தொடர்புடைய செய்திகள்

கஞ்சன் ஜங்கா சிகரம்

  • உயரம் – 8586 மீ
  • உலகின் மூன்றாவது சிகரம்
  • யுனஸ்கோ உலக பாரம்பரிய தளம் – 2016

கர்நாடகா

  • அரசு மற்றும் தனியார் பணிகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கர்நாடகாவில் வழங்கப்பட்டுள்ளது.

சிவிங்கி புலிகள்

  • மத்திய அரசு போட்ஸ்வானா நாட்டிலிருந்து 8 சிவிங்கிபுலிகளை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சிவிங்கிபுலிகள் திட்டம் – 2022
  • நமீபியாவிலிருந்து இந்தியாவிற்கு வருகை – 2022
  • தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகை – 2023
  • தற்போது சிவிங்கிபுலிகளின் எண்ணிக்கை – 37

நீர் மாநாடு 

  • ஐக்கிய நாடுகள் சபையின் நீர் மாநாட்டில் வங்கதேசம் இணைய உள்ளது.

கடற்படையில் இணைப்பு

  • சீன கடற்படையில் ஃபுஜியான் என்ற விமானந்தாங்கி கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.
  • மின்காந்தம் முறையில் விமானம் செலுத்தும் அமைப்பினை உடையது.

செஸ் கிராண்டமாஸ்டர்

Vetri Study Center Current Affairs - V.S.Rahul

  • இந்தியாவின் 91வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தமிழகத்தினைச் சேர்ந்த ராகுல் வி.எஸ் உருவெடுத்துள்ளார்.
  • இவர் தமிழகத்தின் 36வது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

  • 90வது கிராண்ட் மாஸடர் – இளம்பரிதி
  • 89வது கிராண்ட் மாஸடர் – ரோகித்கிருஷ்ணா
  • 88வது கிராண்ட் மாஸடர் – திவ்யா தேஷ்முக்

ஷீத்தல் தேவி

  • சர்வதேச அணியில் இணைந்த முதல் இந்தியா பாரா வில்வித்தை வீரராக ஷீத்தல் தேவி மாறியுள்ளார்.

முக்கிய தினம்

உத்தரகாண்ட் மாநில தினம் – நவம்பர் 9

  • 2000-ல் உத்திரப்பிரதேசத்திலிருந்து பிரிந்த தினத்தினை முன்னிட்டு அனுசரிக்கப்படுகிறது.
  • முதலில் உத்ராஞ்சல் எனவும் 2007-ல் உத்திரகாண்ட் என மாற்றப்பட்டது.

தேசிய சட்ட சேவைகள் தினம் (National Legal Service Day) – நவம்பர் 9

உலக அறிவியல் தினம் (World Science Day) – நவம்பர் 10

  • தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28

உலக நோய் தடுப்பு தினம் (World Immunization Day) – நவம்பர் 10

  • தேசிய தடுப்பூசி தினம் – மார்ச் 16

Related Links

Leave a Comment