Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th and 10th September 2025

Daily Current Affairs 

Here we have updated 9th and 10th September 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

துணைக் குடியரசுத்தலைவர்

Vetri Study Center Current Affairs - suganthi rajakumari

  • இந்தியாவில் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • துணைக் குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு விதி 66ன்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைப்படி ஒற்றை மாற்று வாக்கு மூலம் நடக்கிறது.

தமிழக துணைக் குடியரசுத் தலைவர்கள்

எஸ்.ராதாகிருஷ்ணன்

  • முதல் தமிழக துணைக் குடியரசுத் தலைவர்
  • முதல் இந்திய துணைக் குடியரசுத் தலைவர்
  • பதவிக்காலம்: 1952 – 1962
  • இரண்டாவது இந்திய குடியரசுத் தலைவர் (1962 – 1967)

ஆர்.வெங்கட்ராமன்

  • இரண்டாவது தமிழக துணைக் குடியரசுத் தலைவர்
  • இந்தியாவின் ஏழாவது துணைக் குடியரசுத் தலைவர்
  • பதவிக்காலம்: 1984 – 1987
  • எட்டாவது இந்திய குடியரசுத் தலைவர் (1987 – 1992)

ஆரோக்கியமான பெண்கள், வலுவான குடும்பங்கள்

  • பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக ஆரோக்கியமான பெண்கள், வலுவான குடும்பங்கள் (Swasth Nari Sashakt Parivar Abhiyaan – ஸ்வஸ்த் நாரி சஷக்த் பாரிவார் அபியான்) திட்டமானது செப்டம்பர் 17-ல் துவங்கப்பட உள்ளது.
  • இத்திட்டதின் கீழ் 75,000 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

கட்சித் தாவல் சட்டம்

  • துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சித்தாவல் தடைச்சட்டம் பொருந்தாது.

தொடர்புடைய செய்திகள்

  • 52வது அரசமைப்புச் சட்டத்திருத்தம், 1985 கட்சித்தாவல் தடைச்சட்டம் பற்றியதாகும்.
  • கட்சித்தாவல் சட்டம் 10 அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு மாறும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினரைத் தகுதியிழப்பு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டது.
  • 2003ல் சிறுதிருத்தம் செய்யப்பட்டு கட்சி பிளவுறும் சூழலில் கட்சித் தாவலின் அடிப்படைகள் பொருந்தாது என மாற்றப்பட்டுள்ளது.

கல்வியறிவு விகிதம்

Vetri Study Center Current Affairs - Elathur Lake

  • 2023-24-ல் இந்தியாவின் கல்வியறிவு விகிதம் 80.9%மாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2011-ல் கல்வியறிவு விகிதம் – 74%

இமாச்சலப்பிரதேசம்

  • இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற 4வது மாநிலமாக இமாச்சலப்பிரதேசம் உருவாகியுள்ளது.
  • திரிபுரா, கோவா, மிசோரோம் மாநிலங்களை தொடர்ந்து இப்பட்டியிலில் இமாச்சலப்பிரதேசம் இணைந்துள்ளது.

குழந்தை இறப்பு விகிதம்

  • கேரளாவில் குழந்தை இறப்பு விகிதமானது 5 ஆக பதிவாகியுள்ளது.
  • இது அமெரிக்காவின் குழந்தை இறப்பு விகிதமான 5.6 விட குறைவாகும்.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் – 25
  • இந்திய கிராமப்புற குழந்தை இறப்பு விகிதம் – 28
  • இந்திய நகர்ப்புற குழந்தை இறப்பு விகிதம் – 19

அமெரிக்கா

  • ஐ.நா.பொதுச் சபையில் 80வது அமர்வானது அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

புற்றுநோய் தடுப்பூசி

Vetri Study Center Current Affairs - Educate Girls

  • ரஷ்யா நாடானது புற்றுநோய்க்கான எண்டோமிக்சிஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
  • இது உலகின் முதல் புற்றுநோய் தடுப்பூசி ஆகும்.

ஆசிய கோப்பை போட்டி

  • 17வது ஆசிய கோப்பை டி20 போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

முக்கிய தினம்

உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day) – செப்டம்பர் 10

இமயமலை தினம் (Himalaya Day) – செப்டம்பர் 9

கூடுதல் தகவல்கள்

  • மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் – 2016
  • குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் – 2005
  • பெண்களுக்கான அவசர உதவி எண் : 181

Related Links

Leave a Comment