Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21st and 22nd September 2025

Daily Current Affairs 

Here we have updated 21st and 22nd September 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

திருமலாபுரம்

Vetri Study Center Current Affairs - Tirumalapuram

  • தென்காசியிலுள்ள திருமலாபுரத்தில் நடைபெற்ற அகழாய்வில் கற்களாலான அரண்களுக்குள் ஈமத்தாழிகள் கிடைத்துள்ளது.
  • மேலும் இங்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட ஈட்டிகள், 3 தங்க வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இது தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான கற்களாலான அரண்களுக்குள் ஈமத்தாழிகள் ஆகும்.

பூம்புகார்

  • இந்திய கடல்சார் பல்கலைகழகம் உதவியுடன் பூம்புகாரில் நீருக்கடியில் ஆராய்ச்சியினை தமிழக அரசு நடத்த உள்ளது.
  • தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்துகின்றன.

பெயர் சூட்டல்

  • வேலூரில் அமைந்துள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்பட உள்ளது.

தமிழ்நாடு ஆவணக் காப்பகம்

  • தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள நூல்கள் ஜப்பானிய திசு முறையில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • தமிழ்நாடு ஆவணக் காப்பகம் – 1805

தனி ஆணையம்

  • தமிழக அரசானது மாநில நெடுஞ்சாலைத்துறைக்கென தனி ஆணையத்தினை தொடங்கியுள்ளது.

நிதி உயர்வு 

  • நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசு கூறியுள்ளது.
  • நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் – 1993

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உள்ளது.
  • இத்திட்டம் 1997-98ல் தொடங்கப்பட்டது.

பால்கே விருது

Vetri Study Center Current Affairs - Mohanlal

  • மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 1969முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • 1969-ல் முதன்முதலில் தேவிகா ராணி இவ்விருதைப் பெற்றார்.

இவ்விருதினை தமிழகத்தில் பெற்றவர்கள்

  • 1996 – சிவாஜி கணேசன்
  • 2010 – கே. பாலச்சந்தர்
  • 2019 – ரஜினிகாந்த்

ரேபிஸ் தொற்று

  • இந்தியாவில் 2030-க்குள் ரேபிஸ் தொற்றினை முடிவுக்கு கொண்டு வர தேசிய திட்டத்தினை மத்திய அரசு வகுத்துள்ளது.

தேர்தல் ஆணையம்

  • கடந்த 2019-லிருந்து தேர்தலில் ஈடுபடாத கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
  • ஒரு கட்சியானது மக்கள் பிரநிதிதித்துவ சட்டம் 1951, பிரிவு 29A-ன் பதிவு செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • தேர்தல் ஆணையம் – 25 ஜனவரி 1950
  • தேசிய வாக்காளர் தினம் – ஜனவரி 25
  • அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் – 6

H-1B விசா

  • அமெரிக்காவின் H-1B விசா வைத்திருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் (71%) முதலிடத்தில் உள்ளன.
  • சீனர்கள் (11%) இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • H-1B விசா என்பது அமெரிக்காவினைச் சேர்ந்த முதலாளிகள் சிறப்புத் தொழில்களில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்காக வழங்கப்படுகிறது.

புதுமை குறியீடு

  • ஆப்கானிஸ்தானிலுள்ள பக்ராம் விமான நிலையத்தினை மீண்டும் அமெரிக்கா கட்டுப்பாட்டுகுள் கொண்டு வர உள்ளது.

உலக மல்யுத்த சாம்பியன் ஷிப்

  • குரோஷியாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டியில் 53 கிலோ பிரிவில் அன்டிம் பங்கால் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

அதிவேக சதம்

Vetri Study Center Current Affairs - smriti mandhana

  • ஸ்ருதி மந்தனா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • இவர் 50 பந்துகளில் சதம் அடித்துள்ளார். இதற்கு முன்பு விராட்கோலி 52 பந்துகளில் சதம் அடித்தே சாதனையாக இருந்தது.

முக்கிய தினம்

உலக தசை அழற்சி தினம் (World Myositis Day) – செப்டம்பர் 21

உலக அல்சைமர் தினம் (World Alzheimer’s Day) – செப்டம்பர் 21

உலக காண்டாமிருக தினம் (World Rhino Day) – செப்டம்பர் 22

உலக ரோஜா தினம் (World Rose Day) – செப்டம்பர் 22

சொற்கதிர்

  • Jersey – அணிச்சட்டை
  • தமிழ்நாடு சுயஉதவிக்குழு – 1989 (தர்மபுரி)
  • சுய உதவி குழு – வங்கி இணைப்பு திட்டம் – 1992

Related Links

Leave a Comment