1. மதுசூதனன் என்ற இயற்பெயரைக் கொண்டவர்.
- ஆத்மாநாம்
- மாணிக்கவாசகர்
- திரிகூடராசப்ப கவிராயர்
- சொக்கலிங்கனார்
2. கூற்றை ஆராய்க
1. காகிதத்தில் ஒரு கோடு அவருடைய முக்கியமான கவிதைத் தொகுப்பு.
2. ‘ழ’ என்னும் சிற்றிதழை நடத்தியவர்.
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- இரண்டும் சரியல்ல
- இரண்டும் சரி
3. திரிகூட ராசப்பக் கவிராயரின் கவிதைக் கிரீடம் என்று போற்றப்பட்ட நூல்.
- பிள்ளைத்தமிழ்
- குற்றாலக் குறவஞ்சி
- பள்ளு
- உலா
4. திருக்குற்றாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர்.
- குமரகுருபரர்
- அழகிய சொக்கநாத புலவர்
- திரிகூடராசப்ப கவிராயர்
- மீனாட்சி சுந்தரனார்
5. கொத்து என்பதன் வேர்ச்சொல்
- பூமாலை
- கூந்தல்
- சன்மானம்
- முடிவு
6. கூற்றை ஆராய்க (திரிகூட ராசப்பக் கவிராயர்)
1. தென்காசியில் தோன்றியவர்.
2. குற்றாலநாதர் கோவிலில் பணிபுரியும் காலத்தில் சைவ சமயக் கல்வியிலும் இலக்கிய இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்றார்.
3. குற்றாலத்தின்மீது தலபுராணம், மாலை, சிலேடை, பிள்ளைத்தமிழ், யமக அந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியிருக்கின்றார்.
- 1 மட்டும் தவறு
- 2 மட்டும் தவறு
- 3 மட்டும் தவறு
- 1, 2, 3 தவறு
7. திருவாசகம் என்னும் சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பினை இயற்றியவர்?
- சுந்தரர்
- திருஞானசம்பந்தர்
- திருநாவுக்கரசர்
- மாணிக்கவாசகர்
8. சைவக்குரவர்களில் பொருந்தாதவர்
- சேக்கிழார்
- திருஞானசம்பந்தர்
- திருநாவுக்கரசர்
- மாணிக்கவாசகர்
9. பொருத்துக
1. சுடுகாடு | பண்புத்தொகை |
2. நல்லாடை | வினைத்தொகை |
3. மாண்ட | தொழிற்பெயர் |
4. படித்தல் | பெயரெச்சம் |
- 3, 4, 1, 2
- 3, 4, 2, 1
- 1, 2, 3, 4
- 2, 1, 4, 3
10. கூற்றினை ஆராய்க (திருவாசகம்)
1. சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ளது.
2. திருவாசகத்தில் 15 திருப்பதிகங்கள் உள்ளன.
3. 658 பாடல்கள் அடங்கியுள்ளன.
4. 58 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன.
- 1, 2 சரி
- 1, 3 சரி
- 1, 3, 4 சரி
- 1, 2, 3 சரி
11. திருவாசகம் முழுமையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளவர்.
- ஜார்ஜ் எல்.ஹெரால்ட்
- ஜி.யு.போப்
- சி.வை.தாமோரனார்
- உ.வே.சா.
12. கூற்றை ஆராய்க
1. மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவர்.
2. திருவாதவூரைச் சேர்ந்தவர்.
3. இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றினார்.
4. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் திருவாசகம், திருக்கோவையார்
- அனைத்தும் தவறு
- 3, 4 சரி
- 1, 2 சரி
- அனைத்தும் சரி
13. இரண்டு அடி வாங்கினால்தான்
திருந்துவாய் என்றால்
______-டம் வாங்க
- அகத்தியர்
- தொல்காப்பியர்
- வள்ளுவர்
- பாரதி
14. சரியான கூற்றை தேர்க
1. மொழி விளையாட்டின் மூலம் இறைவனின் பெருமை பேசும் செய்யுள் வகை திருச்சாழல் ஆகும்.
2. ஒரு பெண் இறைவனைப் பழிப்பது போலவும் இன்னொருத்தி இறைவனது செயலை நியாயப்படுத்துவது போலவும் பாடப்படுவது இது.
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- இரண்டும் சரி
- இரண்டம் சரியல்ல
15. குறத்திப்பாட்டு என்று வழங்கப்படும் நூல்
- பள்ளு
- தூது
- குறவஞ்சி
- கலம்பகம்
16. குறவஞ்சி என்பது ஒரு வகை நாடக இலக்கிய வடிவமாகும்.
- நாடக
- இசை
- இயல்
- a மற்றும் b
17. பெற்ற என்பதன் வேர்ச்சொல்
- பேறு
- பெரு
- பெருகு
- பெறு